பாடசாலை கீதம்
யா அல்லாஹ் உன் அருள் வேண்டினோம்
இணையில்லா நின் சிரம் தாழ்த்தினோம்
துணை நீயே என்று கரமேந்தி நின்றோம்
வினை நீக்கி எம் குறை போக்குவாய் (யா அல்லாஹ்)
புகழ் யாவும் உனக்கு அன்றோ
இந்தப் புவி ஆளும் வேந்தன் ஆன்றோ
அன்பு நிறைந்தவனே அருளைச் சொறிபவனே
ஆகும் அறிவாற்றல் தன்னைத் தாருமே (யா அல்லாஹ்)
மறுமை நாளின் அதிபதியே
நல்ல மறை தந்த அருள் ஜோதியே
நிறை நல்ஞானமும் உயர் மெய்ஞானமும்
குறையின்றித் தரக் கோரினோம் (யா அல்லாஹ்)
உன்னைத்தானே வணங்கி நின்றோம்
உந்தன் காவல் தன்னைத் தேடினோம்
நேர்வழி காட்டுவாய் தீயோர் செயல் நீக்குவாய்
சீர் வாழ்விற்காய் மன்றாடினோம் (யா அல்லாஹ்)
ஒலுவில் அல் ஹம்றா எனும் கலையகம்
ஒளி வீசி நற்பெயர் எய்தவே
ஓங்கும் புகழ் காணவும் உயர் நிலை நாட்டவும்
ஓயாது என்றும் உன்னை யாசிப்போம் (யா அல்லாஹ்)
நல்ல கல்விதனை ஊட்டிவிடும்
நல்ல ஆசான் உயர் வாழ்விற்கும்
நாளும் எமக்காகவே வாழும் பெற்றோர்களும்
பேறு பெற்றோங்க உனை நாடினோம் (யா அல்லாஹ்)